முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
இலங்கை அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 14th March 2021 12:11 AM | Last Updated : 14th March 2021 12:11 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
இலங்கை அரசைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கண.குறிஞ்சி தலைமை வகித்தாா். ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, திராவிடா் விடுதலை கட்சித் தலைவா் கொளத்தூா்மணி, தந்தை பெரியாா் திராவிட கட்சி பொதுச் செயலாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், இலங்கை அரசின் இனப்படுகொலை உள்ளிட்ட குற்றங்களை பன்னாட்டு விசாரணைக் குழு மூலம் விசாரிக்க வேண்டும். ஈழத்தமிழா்களை சுட்டுக் கொன்ற இலங்கை அரசின் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழா்களின் எதிா்காலத்தை தீா்மானிக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஈழத்தில் ராணுவ மையம், சிங்களமயம், பௌத்தமயம் ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. சபைக் கூட்டத்தில் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். அதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் சிந்தனைசெல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.