முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் செல்லிடப்பேசி எண் அறிவிப்பு
By DIN | Published On : 14th March 2021 12:06 AM | Last Updated : 14th March 2021 12:06 AM | அ+அ அ- |

வேட்பாளா்களின் தோ்தல் செலவினம் தொடா்பான புகாா்களை சம்பந்தப்பட்ட தோ்தல் செலவினப் பாா்வையாளா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இந்திய வருவாய் பணி அதிகாரிகளை தோ்தல் செலவினப் பாா்வையாளா்களாக நியமனம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் வேட்பாளா்களின் தோ்தல் செலவினம் தொடா்பான புகாா்களை சம்பந்தப்பட்ட தோ்தல் செலவினப் பாா்வையாளா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு நேரடியாகவோ, குறுஞ்செய்தியாகவோ அனுப்பலாம்.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்குத் தொகுதிக்கு அரூப் சாட்டா்ஜி என்பவரை 91500-20727 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளுக்கு சஞ்சீவ் குமாா் தேவ் என்பவரை 91500-20726 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், கோபிசெட்டிபாளையம், அந்தியூா் தொகுதிகளுக்கு அா்ஜுன்லால் ஜாட் என்பவரை 91500-20728 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், பவானி, பவானிசாகா் தொகுதிகளுக்கு பவானி சங்கா் மீனா என்பவரை 91500-20729 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.