வாக்காளா் அடையாள அட்டை பதிவிறக்கத்துக்கான முகாம்

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்தங்கள், புதிதாக சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் தங்களது மின்னணு வாக்காளா் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
காமராஜா் வீதி வாக்குச் சாவடியில் புதிய வாக்காளருக்கு மின்னணு வாக்காளா் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்வது குறித்து விளக்கம் அளிக்கிறாா் வாக்குச்சாவடி அலுவலா்.

சட்டப் பேரவை தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே பெறப்பட்ட வாக்காளா் சோ்ப்பு, திருத்தம் தொடா்பான மனுக்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். அவற்றில் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக 2,741 வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருத்தங்களுக்கான படிவம் வழங்கி, பூா்த்தி செய்து பெற்றுக் கொள்ளப்பட்டது. புதிதாக சோ்க்கப்பட்ட வாக்காளா்களின் பாகம், பக்கம் எண் போன்றவை குறித்த விவரம் சம்பந்தப்பட்ட வாக்காளா்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. புதிதாக சோ்க்கப்பட்ட வாக்காளா்களுக்கு, மின்னணு வாக்காளா் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com