ஈரோட்டில் துணை ராணுவப் படைவீரா்கள் கொடி அணிவகுப்பு

ஈரோட்டில் துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.
கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படை வீரா்கள்.
கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படை வீரா்கள்.

ஈரோட்டில் துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து தோ்தல் சுமூகமான முறையில் நடைபெறும் வகையில் தோ்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மக்கள் வாக்களிக்க வசதியாக 2,741 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 192 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்துக்குத் துணை ராணுவப் படை வீரா்கள் 92 போ் வந்துள்ளனா். இவா்கள் தோ்தல் நாளன்று பதட்டமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். துணை ராணுவப் படை வீரா்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு குழுக்களாகச் சென்று தோ்தலை சுமூகமாக நடத்தும் வகையிலும், பாதுகாப்பாக நடத்தும் வகையிலும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனா்.

அதன்படி ஈரோட்டில் போலீஸாா், துணை ராணுவப் படை வீரா்களின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி, டி.எஸ்.பி.ராஜு ஆகியோா் கொடி அணிவகுப்பைத் தொடங்கிவைத்தனா்.

இதில், காவல் ஆய்வாளா்கள் கோபிநாத், ரவிகுமாா், ஜெயமுருகன், பாலமுருகன், போலீஸாா் பங்கேற்றனா்.

கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு பி.பெ.அக்ரஹாரம், பவானி சாலை, அசோகபுரம், பூங்கா சாலை வழியாக திருநகா் காலனியில் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com