முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பெருந்துறையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: தி.மு.க. தோ்தல் அறிக்கை
By DIN | Published On : 14th March 2021 10:52 PM | Last Updated : 14th March 2021 10:52 PM | அ+அ அ- |

பெருந்துறையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தி.மு.க. தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளாா். அதில், பெருந்துறை ஒன்றியத்துக்கான திட்டங்கள் விவரம்:
பெருந்துறையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். நல்லாம்பட்டி பகுதிகளில் குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படும். பெருந்துறையில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். பெருந்துறை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும்.
பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலம் வழங்கிய உரிமையாளா்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.