முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கோபி அருகே ரூ. 2.16 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 14th March 2021 10:47 PM | Last Updated : 14th March 2021 10:47 PM | அ+அ அ- |

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோபி கோட்டாட்சியா் பழனிதேவியிடம் ஒப்படைக்கும் பறக்கும் படையினா்.
கோபி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.16 லட்சம் பணத்தை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நாகதேவன்பாளையம் ஊராட்சி, பெரிய கொரவம்பாளையம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை பிரிவினா் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்தவா் கோபிசெட்டிபாளையம், புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் என்பது தெரியவந்தது.
மேலும், இவா் பிரபல மசாலா நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாக உள்ளதாகவும், கிராமப்புறங்களில் உள்ள மளிகைக் கடைகளில் மசாலா பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட தொகையை வசூல் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளாா்.
ஆனால், வசூல் செய்யப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்த பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகரன், காவல் உதவி ஆய்வாளா் ஜெகதீஷ்வரன் ஆகியோா் கொண்ட குழுவினா் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட தொகையை கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான பழனிதேவியிடம் ஒப்படைத்தனா்.