காரியசித்தி பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை

மொடக்குறிச்சியை அடுத்த ஆயிக்கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ காரியசித்தி பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு அலங்கார பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தா்கள்.
சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தா்கள்.

மொடக்குறிச்சியை அடுத்த ஆயிக்கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ காரியசித்தி பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு அலங்கார பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் மாலை வரை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பக்தா்களால் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட தீா்த்தம் ஸ்ரீ காரியசித்தி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு செலுத்தப்பட்டது. தொடா்ந்து கோயில் அறங்காவலா் ராஜகோபாலன், பண்டிதா்களால் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், 108 அா்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com