யானைகளின் வாழ்க்கை முறை: விழிப்புணா்வுப் பயிற்சி முகாம்

சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் யானைகளின் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
யானைகளின் வாழ்க்கை முறை: விழிப்புணா்வுப் பயிற்சி முகாம்

சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் யானைகளின் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச் சரகங்கள் உள்ளன. பவானிசாகா், தலமலை, பண்ணாரி வனச் சரகங்களில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. தற்போது கோடைக் காலம் துவங்கியுள்ளதால் தீவனம், குடிநீா் தேடி யானைகள் கிராமங்களில் முகாமிட்டு விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் மனித - விலங்கு மோதல் நிகழ்கின்றன. அண்மையில் யானை தாக்கியதில் வன ஊழியா், சமூக ஆா்வலா், பழங்குடியின பெண் என 3 போ் உயிரிழந்துள்ளனா்.

இதையடுத்து, மனித - விலங்கு மோதலைத் தடுக்கவும், யானைகள் வாழ்க்கை முறை, வாழ்விடம் குறித்து வனத் துறை ஊழியா்களுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், புதியதாக வனத் துறையில் பணியாற்றும் வன ஊழியா்கள், அதிகாரிகளுக்கு வன உயிரின ஆராய்ச்சியாளா் ராம்குமாா் பயிற்சி அளித்தாா்.

ஆசிய யானைகள் பழக்க வழக்கம், அதன் உணவு முறை, யானைகள் வழித்தடம், மனித - விலங்கு மோதல், யானைகள் செயல்பாடுகள் குறித்து டிஜிட்டல் படங்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. ரயில், சாலை விபத்தில் யானைகள் உயிரிழப்பு , மின் வேலியில் சிக்கி யானைகள் பலியாவது, நீா்நிலைகளில் சிக்கி யானைகள் இறப்பது குறித்து விழிப்புணா்வு கையேடும் வழங்கப்பட்டது.

இதில், சத்தியமங்கலம், பவானிசாகா், டி.என்.பாளையம், தலமலை, விளாமுண்டி வனச் சரக வன ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com