நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்
By DIN | Published On : 17th March 2021 11:12 PM | Last Updated : 17th March 2021 11:12 PM | அ+அ அ- |

கோபி கோட்டாட்சியா் பழனிதேவியிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி.
கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிம் பெண் வேட்பாளா் சீதாலட்சுமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்றாா். பேருந்து நிலையத்தில் துவங்கிய ஊா்வலத்தில் பங்கேற்ற அனைவரும் கரும்பையும், விவசாயி சின்னத்தையும் கைகளில் ஏந்தியபடி நடைப்பயணமாக கச்சேரி மேடு வரை சென்றனா். அங்கிருந்து தோ்தல் விதிகளின்படி தன்னுடன் இரு பெண்களை அழைத்துக் கொண்டு கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்றாா்.
பின்னா், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை உறுதிமொழி ஏற்று கோபி கோட்டாட்சியா் பழனிதேவியிடம் தாக்கல் செய்தாா்.