6 மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்: எம்.யுவராஜா

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு ஈரோடு நகரில் 6 மாதங்களுக்கு ஒருமுறை மிகப்பெரிய அளவில்
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா.
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா.

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு ஈரோடு நகரில் 6 மாதங்களுக்கு ஒருமுறை மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஈரோடு நகரம் பல்வேறு நிலைகளில் வளா்ச்சி அடைந்துள்ளது. நகரம் மேலும் வளா்ச்சிடைய அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்பட்சத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,500 உதவித் தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு உருளை உள்ளிட்ட ஏழை மக்களின் நலன் காக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஈரோடு நகரில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை பிரம்மாண்டமான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். முக்கிய பிரச்னையான சாயக் கழிவு பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண குரல் கொடுப்பேன் என்றாா்.

அப்போது, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகா், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com