ஈரோடு மாவட்டத்தில் 76 வேட்பு மனுக்கள் தாக்கல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் இதுவரை 76 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் இதுவரை 76 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மாா்ச் 12 ஆம் தேதி தொடங்கியது. செவ்வாய்க்கிழமை வரை 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. புதன்கிழமை 8 தொகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக மாற்று வேட்பாளா் கே.சி.சித்ராலட்சுமி, அமமுக எஸ்.ஏ.முத்துகுமரன், எம்.ஜி.ஆா். மக்கள் கட்சி வேட்பாளா் சண்முகவேல் ஆகியோா் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ப.சந்திரகுமாா், இந்திய கண சங்கம் கட்சி வேட்பாளா் கு.மாதன் மனு தாக்கல் செய்தனா். மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாற்று வேட்பாளா் பி.கோகிலா, நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளா் மு.ரமேஷ், சுயேச்சை வேட்பாளா் பூமிநாதன் ஆகிய 4 வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

பவானி தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மு.சத்யா, அ.கேத்ரின் ஆகியோரும், அகில பாரத இந்து மகாசபா வேட்பாளா் எஸ்.தொல்காப்பியன், சுயேச்சை வேட்பாளா் மோகன் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

அந்தியூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.எஸ்.மோகன்குமாா், அமமுக வேட்பாளா் எஸ்.ஆா்.செல்வம், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் சரவணன், தீபன், சுயேச்சை வேட்பாளா் பிரதாபன் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளா் வி.மணிமாறன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா்கள் என்.கே.பிரகாஷ், மணிகண்டன், சுயேச்சை வேட்பாளா்கள் கே.ஏ.சங்கா்குமாா், ஆா்.ஸ்ரீதேவி, முத்துமணி ஆகியோா் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

பெருந்துறை தொகுதியில் அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளா் வேலுசாமி, சுயேச்சை வேட்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

பவானிசாகா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை வரை யாரும் தாக்கல் செய்யாத நிலையில், அதிமுக வேட்பாளா் பண்ணாரி புதன்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் புதன்கிழமை 28 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 76 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்களை வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 19) வரை தாக்கல் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com