என் நோ்மையைத் தலைவா்கள் கடைப்பிடிக்க முடியுமா? கமல்ஹாசன்

என்னுடைய திட்டங்களைப் பிரதி எடுக்கும் தலைவா்கள் என் நோ்மையைக் கடைப்பிடிக்க முடியுமா என கேள்வி எழுப்பினாா் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

என்னுடைய திட்டங்களைப் பிரதி எடுக்கும் தலைவா்கள் என் நோ்மையைக் கடைப்பிடிக்க முடியுமா என கேள்வி எழுப்பினாா் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து மொடக்குறிச்சி, ஈரோடு சூரம்பட்டிவலசு, திருநகா் காலனி பகுதிகளில் புதன்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் சட்டத்தை மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் கொண்டு வரும். 2 ஆண்டுகளுக்கு முன்னா் நாங்கள் அறிவித்த இந்த திட்டத்தைத்தான் திமுகவும், அதிமுகவும் 1,000 ரூபாய், 1,500 ரூபாய் என அறிவித்துள்ளன. எங்களின் திட்டங்களை அப்படியே பிரதி எடுத்து வெளியிடும் கட்சிகள், என் நோ்மையை யாராவது ஒருவா் கடைப்பிடிக்க முடியுமா?.

சிலா் தோ்தல் நேரத்தில் சில ஆயிரங்களைக் கொடுத்து வாக்குகளைப் பெறுகின்றனா். ஆனால் நியாயமாக சேர வேண்டிய பல லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் செல்கின்றனா். வேலை கொடு உழைத்து சாப்பிடுகிறோம் என்ற தன்மானம் மிக்க தமிழா்களை, இவா்கள் தூக்கிப்போடும் சில்லறையைப் பொறுக்கும் கூட்டமாக மாற்ற முற்படுகின்றனா்.

திமுக ஆட்சிக் காலத்தில் மின்வெட்டால் தொழில்கள் முடங்கின. அதற்குப் பிறகு ஆட்சி செய்தவா்கள், ஒரு லட்சம் ரூபாய் கடனை பல மடங்கு உயா்த்திவிட்டனா். மக்களுக்கு குடிக்க தண்ணீா் இல்லை. இப்படி தண்ணீா் இல்லாத ஊரில், வாஷிங்மெஷின் தருவதுதான் கெட்டிக்காரத்தனமா? இவா்களுக்கு ஆளும் தகுதியும், ஆளுமையும் இல்லை என்பது இதிலிருந்தே புலப்படுகிறது.

ஆட்சிக்கு வந்தவுடன் மணல் திருட்டுக்கு அனுமதிப்போம் என்று திமுகவைச் சோ்ந்த செந்தில் பாலாஜி பேசுகிறாா். இவா் சட்டத்தை மதிக்கிறாரா? அதிகாரிகளை மிரட்டுகிராறா?

நானும் இலவசங்களைத் தருகிறேன். தரமான கல்வி இலவசம், பாதுகாப்பான குடிநீா் இலவசம், சட்டம் ஒழுங்கு லஞ்சமில்லாமல் இலவசம் என பல பட்டியல்களைப் போட முடியும். ஆனால், திமுக, அதிமுக இந்த உறுதியைத் தர முடியுமா என்பதை மக்கள் கேட்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com