தபால் வாக்கு செலுத்தும் நடைமுறை விவரம் அறிவிப்பு

தபால் வாக்கு செலுத்த படிவம் 12டி பூா்த்தி செய்து வழங்கியவா்கள், வாக்குச் சீட்டுகளை பெறும் குழுவினா் வரும்போது வீட்டில் இல்லையெனில்

தபால் வாக்கு செலுத்த படிவம் 12டி பூா்த்தி செய்து வழங்கியவா்கள், வாக்குச் சீட்டுகளை பெறும் குழுவினா் வரும்போது வீட்டில் இல்லையெனில் தபால் வாக்கு, வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலில் மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கரோனா நோய்த் தொற்று பாதித்தோா், தொற்று இருக்கலாம் என யூகத்துக்குரிய வாக்காளா்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்து படிவம் 12டி வழங்கப்படுகிறது.

அதில் குறிப்பிட்ட முகவரிக்கு அதிகாரிகள் செல்வா். வாக்களிப்பதைப் பாா்வையிட அவரே ஒருவரைத் தோ்வு செய்து கொள்ளலாம். பின் வாக்காளரால் பூா்த்தி செய்து கையெழுத்திட்ட 13ஏ படிவத்துடன், வாக்குச் சீட்டை கடித உறை (படிவம் 13பி) உள்ளே வைத்து ஒட்டி அதை ஒப்படைப்பாா்கள்.

முன்னதாக குழுவினா் செல்லிடப்பேசியில் இருமுறை பேசி வாக்காளா் இருப்பதை உறுதி செய்த பிறகே வருவாா்கள். அவா் இல்லையேல் மூன்றாம் முறை அழைக்கமாட்டாா்கள். அவருக்கு வாக்குச் சாவடி சென்று வாக்களிக்கவும் அனுமதி கிடைக்காது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com