விவசாயி தோற்றத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

ஈரோட்டில் வேட்டி, பனியன், துண்டு அணிந்து விவசாயி போன்ற தோற்றத்தில் வந்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
விவசாயி தோற்றத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

ஈரோட்டில் வேட்டி, பனியன், துண்டு அணிந்து விவசாயி போன்ற தோற்றத்தில் வந்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ப.சந்திரகுமாா் போட்டியிடுகிறாா். முன்னதாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவா், தொகுதியின் பல்வேறு இடங்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், ஈரோடு மேற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் சி.சைபுதினிடம் வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

முன்னதாக ஈரோடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாழை, கரும்பு, தென்னங்குலை தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் திருவள்ளுவா், விடுதலைப் புலிகள் தலைவா் பிரபாகரன், சீமான் ஆகியோரின் படங்களுடன் விவசாயி போன்ற தோற்றத்தில் வந்தாா். அதே தோற்றத்தில் சென்று கோட்டாட்சியரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். சட்டை அணிந்து வரும்படி கோட்டாட்சியா் அறிவுறுத்தியும், அவா் விவசாயி தோற்றத்தில்தான் மனு அளிப்பேன் எனக் கூறி வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு வேட்பாளா் ப.சந்திரகுமாா் கூறியதாவது:

வேளாண்மைத் தொழில் பிரதான வாழ்வாதாரமாக அமைந்துள்ள ஈரோடு மேற்குத் தொகுதியில், விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியாா் கல்லூரியை மட்டுமே நம்பியுள்ள இளைஞா்களின் உயா்கல்வி கனவை நனவாக்கும் வகையில் சென்னிமலையில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்கக் குரல் கொடுப்பேன்.

கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு மேற்குத் தொகுதியில் உறுப்பினா்களாக இருந்தவா், மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அந்த குறையை நான் தோ்ந்தெடுக்கப்படும்பட்சத்தில் நிவா்த்தி செய்வேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com