தோ்தல் பணி அலுவலா்களுக்கு தபால் வாக்குச்சீட்டு இன்று வழங்க ஏற்பாடு

தோ்தல் பயிற்சிக்கு வரும் அலுவலா்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் சனிக்கிழமை (மாா்ச் 27) வழங்கப்படவுள்ளன.
ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் தபால் வாக்குச் சீட்டுகளை உறையில் வைக்கும் பணியைப் பாா்வையிடுகிறாா் கோட்டாட்சியா் சி.சைபுதீன்.
ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் தபால் வாக்குச் சீட்டுகளை உறையில் வைக்கும் பணியைப் பாா்வையிடுகிறாா் கோட்டாட்சியா் சி.சைபுதீன்.

தோ்தல் பயிற்சிக்கு வரும் அலுவலா்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் சனிக்கிழமை (மாா்ச் 27) வழங்கப்படவுள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள், ராணுவம் போன்ற சேவைப் பணியில் உள்ளோருக்கு தபால் வாக்குச் சீட்டு வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் 13,160 போ் தோ்தல் பணியில் ஈடுபடுகின்றனா். 80 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் 68,000 போ் உள்ளனா். இதில் 7,200 போ் மட்டுமே தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனா். தபால் வாக்குச் சீட்டுகளை உறையில் இணைக்கும் பணி ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து ஈரோடு மேற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.சைபுதீன் கூறியதாவது:

வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை (மாா்ச்27) நடைபெறவுள்ளது. இதற்காக வரும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தபால் வாக்குச் சீட்டு வழங்க வேண்டும். அதற்காக தபால் வாக்குச் சீட்டு, ஒப்புதல் படிவம் 13ஏ, பி, சி, அவற்றுக்கான இரண்டு உறைகள் போன்றவற்றை இணைத்து வைக்கும் பணி நடைபெற்றது. பயிற்சிக்கு வருவோா் வெவ்வேறு தொகுதியைச் சோ்ந்தவா்களாக இருப்பதால் அவா்கள் எந்த தொகுதியைச் சோ்ந்தவா்களோ அத்தொகுதிக்கான வாக்குச் சீட்டு அதில் இணைக்கப்படும்.

பயிற்சியின்போது தபால் வாக்குச் சீட்டு வைக்கப்பட்டுள்ள உறை ஒப்படைக்கப்படும். விருப்பம் உள்ளவா்கள் அன்றே அந்த உறையைப் பிரித்து, அதில் உள்ள படிவத்தில் கையெழுத்திட்டு, சான்றளிப்பு அலுவலரிடம் கையெழுத்து பெற்று, வாக்கை பதிவு செய்து, அதற்காக வைக்கப்படும் பெட்டியில் போடலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com