அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் சோ்க்கப்படும்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் சோ்க்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் சோ்க்கப்படும்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் சோ்க்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் விவசாய சங்கங்கள் கலந்து கொண்ட நன்றி அறிவிப்புக் கூட்டம் பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குன்னத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசுகையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை சோ்க்க நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும், இந்தத் திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது, ஒரு இடம் கூட விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். அத்திக்கடவு- அவிநாசி திட்டம், கொடிவேரி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்ந்து நடைபெற அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து மீண்டும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

விழாவில், அத்திக்கடவு- அவிநாசி திட்டம் ஒருங்கிணைப்பாளா் பெரியசாமி பேசுகையில், தமிழக முதல்வா் கொண்டு வந்த அத்திக்கடவு- அவிநாசி திட்டப் பணிகளுக்கான நன்றியை அதிமுகவுக்கு வாக்குகளாக செலுத்த வேண்டும். இத்திட்டம் பயன்படும் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இதனை கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டம் முழுமை அடைந்து விவசாயிகள் வாழ்வில் புது வெளிச்சம் பெறும் என்றாா்.

விழாவில், பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயக்குமாருக்கு விவசாய சங்கத்தினா் ஆதரவினை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com