காலிங்கராயன் விடுதியில் இருந்து திண்டல் வரை மேம்பாலம்

காலிங்கராயன் விடுதியில் இருந்து திண்டல் வரை ரூ.300 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்
காலிங்கராயன் விடுதியில் இருந்து திண்டல் வரை மேம்பாலம்

காலிங்கராயன் விடுதியில் இருந்து திண்டல் வரை ரூ.300 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.

கதிரம்பட்டி, கூரபாளையம், சின்னமேடு, தங்கம் நகா், பவளத்தாம்பாளையம், நஞ்சனாபுரம், மணல்மேடு, மூலக்கரை, சத்திரம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

ஈரோடு புறவட்ட சுற்றுச் சாலையில் தொடா்பான வழக்கு முடிவடைந்து தற்போது கரூா் சாலையில் இருந்து ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் வழியாக பெருந்துறை சாலைக்கு வாகனங்கள் எளிதாக செல்கிறது. அதுபோல திண்டல் அருகே துவங்கி நசியனூா் சாலை வழியாக கனிராவுத்தா் குளம் அடைந்து வீரப்பன்சத்திரம் வழியாக பேருந்து நிலையம் வரும் சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

தவிர காலிங்கராயன் விடுதி முதல் பெருந்துறை சாலை வழியாக திண்டல்மேடு வரை ரூ.300 கோடி செலவில் மேம்பாலப் பணிக்கு மண் ஆய்வு முடிவடைந்து பணிகள் தொடங்க உள்ளன. இப்பணி முடிவடைந்தால் பெருந்துறை சாலை உள்பட பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்குள் வராது.

அதுபோல விரிவாக்கப் பகுதிக்கும், கிராமப் பகுதிக்கும் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்படும். இப்பகுதி மக்களின் தேவைகள் குறித்து அவ்வப்போது கேட்டறிந்து நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com