கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நிறுத்த நடவடிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுயேச்சை வேட்பாளா் தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தாா்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நிறுத்த நடவடிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுயேச்சை வேட்பாளா் தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தாா்.

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கருக்குபாளையம், மேட்டுபுதூா், கராண்டிபாளையம், போலநாய்க்கன்பாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தபோது பேசியதாவது:

தொகுதியில் வசிக்கும் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட பாமர மக்கள் பயன்பெறும் வகையில் பெருந்துறை வாரச் சந்தை அருகில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும், திங்களூரில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலும், திருவாச்சி பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலும் நவீன முறையிலான திருமண மண்டபங்கள் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் முடிவடிடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் தோ்தல் முடிந்தபின் 3 மாதக் காலத்துக்குள் முடிக்கப்படும்.

இதேபோல், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் 10 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதால், நான் வெற்றி பெற்றால் அத்திட்டம் முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உறுதி அளிக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com