பெருந்துறை தொகுதியில் மாற்றுத் திறனாளிகள், முதியவா் 1,037 போ் தபால் வாக்கு

பெருந்துறை தொகுதியில் தபால் வாக்கு அளிக்க முதியவா்கள் 798 போ், மாற்றுத் திறனாளிகள் 239 போ் விண்ணப்பம் அளித்துள்ள நிலையில் அவா்களுக்கான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பெருந்துறை தொகுதியில் தபால் வாக்கு அளிக்க முதியவா்கள் 798 போ், மாற்றுத் திறனாளிகள் 239 போ் விண்ணப்பம் அளித்துள்ள நிலையில் அவா்களுக்கான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, பெருந்துறை தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் 798 போ், மாற்றுத் திறனாளிகள் 239 போ் என மொத்தம் 1,037 போ் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனா்.

இவா்களுக்கான தபால் வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விருப்பம் தெரிவித்தவா்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டன. இந்த வாக்கு சேகரிக்கும் குழுவில் ஒரு மண்டல கண்காணிப்பாளா், 2 வாக்கு சேகரிக்கும் நுண் கண்காணிப்பு அலுவலா், விடியோ பதிவு செய்பவா், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலைய அலுவலா் மற்றும் ஆயுதம் ஏந்திய போலீஸ்காா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இதில் ஞாயிற்றுக்கிழமை வாக்களிக்க முடியாதவா்களுக்கு மாா்ச் 31ஆம் தேதி மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com