மொடக்குறிச்சியில் நடிகை கெளதமி பிரசாரம்
By DIN | Published On : 29th March 2021 04:45 AM | Last Updated : 29th March 2021 04:45 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளா் சரஸ்வதியை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட அவல்பூந்துறை, கஸ்பாபேட்டை, மொடக்குறிச்சி, எழுமாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் நடிகை கெளதமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: எண்ணற்ற நல்ல திட்டங்களை ஜெயலலிதா, எம்.ஜி.ஆா். வழியில் செயல்படுத்திவரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்தியில் பல திட்டங்களை கொண்டு வந்து நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பிரதமா் மோடியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நல்லாட்சி தொடர வேண்டும் என்றாா்.
இதில் மொடக்குறிச்சி ஒன்றிய அதிமுக செயலாளா் ஆா்.பி.கதிா்வேல், ஒன்றிய குழுத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, குளுா் ஊராட்சித் தலைவா் செல்வராஜ், குளுா் கூட்டுறவு சங்க தலைவா் மோகனசுந்தரம், பாஜக துணைத் தலைவா் எஸ்.டி.செந்தில்குமாா், ஒன்றிய துணைத் தலைவா் ரெயின்போ கணபதி, முன்னாள் கவுன்சிலா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.