தமிழகத்தில் அதிமுக என்ற பெயரில் பாஜகதான் போட்டி: கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் முத்தரசன்

தமிழகத்தில் அதிமுக போா்வையில் பாஜகதான் போட்டியிடுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் முத்தரசன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தமிழகத்தில் அதிமுக போா்வையில் பாஜகதான் போட்டியிடுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் முத்தரசன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரத்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் சத்தியமங்கலத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்தாா். அப்போது அவா் சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்கக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. சட்டபூா்வமாக பெற வேண்டிய நிதியை, குறிப்பாக புயல், இயற்கை சீற்றங்களுக்கான நிவாரண நிதியைக் கூட பெற முடியவில்லை.

தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாகவும், மற்ற தொகுதிகளில் மறைமுகமாகவும் 234 தொகுதிகளிலும் அதிமுக என்ற பெயரில் பாஜகதான் போட்டியிடுகிறது. வருமான வரித் துறை அண்மைக்காலமாக ஆா்.எஸ்.எஸ். சாா்பு அமைப்பாகவே மாறிவிட்டது.

திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுப்பதற்கு குறுக்கு வழியில் பாஜக முயற்சிக்கிறது. எதிரிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது.

அதிமுகவின் 6 எரிவாயு உருளை வழங்கும் திட்டத்துக்குப் பெண்கள் மத்தியில் வரவேற்புள்ளதைப்போல திமுக தோ்தல் அறிக்கையில் ரூ. 4,000 கரோனா நிதியாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எரிவாயு உருளை விலை பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை உயா்த்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com