ஈரோடு மேற்குத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: கே.வி.இராமலிங்கம்

ஈரோடு மேற்குத் தொகுதியை தன்னிறைவு பெற்ற, முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என அந்த தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.
ஈரோடு சித்தோடு பகுதியில் வாக்கு சேகரித்த மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம்.
ஈரோடு சித்தோடு பகுதியில் வாக்கு சேகரித்த மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம்.

ஈரோடு மேற்குத் தொகுதியை தன்னிறைவு பெற்ற, முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என அந்த தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.

ஈரோடு சித்தோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

ஈரோடு நகா் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், விபத்துகளைத் தடுக்கும் வகையிலும் ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் ரூ. 64 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட நகரப் பகுதிகளில் ரூ. 165 கோடி மதிப்பில் 809.16 கி.மீ தூரம் புதை மின் கேபிள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் பெரியாா் நகா், பெரும்பள்ளம் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 125.89 கோடி மதிப்பில் 1,072 குடிசை மாற்று திட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் சாக்கடை கழிவுநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில் ரூ. 115 கோடி மதிப்பில் மாநகராட்சிப் பகுதிகளுக்கு புதை சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்கள் ஈரோடு மேற்குத் தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டங்களை செயல்படுத்தி ஈரோடு மேற்குத் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com