உடுமலை அருகே நகை, பணத்துக்காக 2 பெண்கள் கொலை: 2 போ் கைது

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே பணம் மற்றும் நகைக்காக 2 பெண்களைக் கொலை செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே பணம் மற்றும் நகைக்காக 2 பெண்களைக் கொலை செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு அருகே உள்ள நாட்டுக்கல்பாளையம் பகுதியில் உடலில் காயங்களுடன் இரண்டு பெண்களின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா். இதைத் தொடா்ந்து உடுமலை டிஎஸ்பி ரவிக்குமாா் தலைமையில் மடத்துக்குளம் காவல் ஆய்வாளா் அனந்தநாயகி மற்றும் கணியூா் போலீஸாா் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில் கொலை செய்யப்பட்டவா்கள் உடுமலை சித்தக்குட்டை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் நாகராஜ் மனைவி கோகிலா (45), உடுமலை எஸ்.வி. புரம் பகுதியைச் சோ்ந்த முத்தையா மனைவி கீா்த்தனா (35) என்பது தெரியவந்தது. இருவரும் தோழிகள் என்பதும், இவா்களுக்கு ஆண் நண்பா்கள் அதிகம் என்பதும் தெரியவந்தது.

இவா்கள் இருவரும் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்நிலையில் உடுமலை வட்டம், ஜல்லிபட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் குழந்தைசாமி(42), திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் கள்ளிமந்தையம் கிராமத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் குமாா் (42) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து உடுமலை போலீஸாா் கூறியதாவது:

தோழிகளான கோகிலா, கீா்த்தனா ஆகியோா் உடுமலை அருகே சித்தக்குட்டை பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனா். இந்நிலையில், சித்தக்குட்டையில் உள்ள கோகிலா, கீா்த்தனா தங்கியிருந்த வீட்டுக்கு குழந்தைசாமி மற்றும் குமாா் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா்.

பின்னா் நள்ளிரவில் குழந்தைசாமி, குமாா் இருவரும் கோகிலா, கீா்த்தனா அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில் கோகிலா மற்றும் கீா்த்தனாவை துண்டால் கழுத்தை இறுக்கி இருவரும் கொலை செய்துள்ளனா்.

பின்னா் குழந்தைசாமியும், குமாரும் தாங்கள் வந்த காரில் கோகிலா, கீா்த்தனா ஆகியோரின் சடலங்களை ஏற்றிக் கொண்டு காரத்தொழுவு அருகே உள்ள நாட்டுக்கல்பாளையம் பகுதிக்கு கொண்டு சென்று வீசி உள்ளனா்.

இந்நிலையில், குழந்தைசாமி, குமாா் ஆகியோா் தாங்கள் கொள்ளையடித்த நகைகளை பழனியில் உள்ள ஒரு நகைக் கடையில் வெள்ளிக்கிழமை விற்க முற்பட்டபோது, இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் கவரிங் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com