அம்மாபாளையத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அம்மாபாளையத்தில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அம்மாபாளையத்தில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

திருமுருகன்பூண்டி பேரூராட்சி 10ஆவது வாா்டுக்கு உள்பட்ட அம்மாபாளையம் பகுதி திருப்பூா்-அவிநாசி செல்லும் பிரதான நெடுஞ்சாலையாகவும், ராக்கியபாளையம், தேவராயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சந்திப்பும் உள்ள பகுதியாகவும் உள்ளது.

இப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது. இங்கு காவல் துறையினரின் சோதனைச் சாவடியும் உள்ளது.

மேலும், நெடுஞ்சாலையின் இருபுறமும் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், தேநீா்க் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து, வாகன விபத்தைத் தடுக்கவும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், திருமுருகன்பூண்டி போலீஸாா், பேரூராட்சி நிா்வாகத்தினா் இணைந்து வணிக நிறுவனங்கள் முன் இருந்த ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com