வாசனை திரவிய ஆலைகள் மூடல்: 2 டன் பூக்கள் ஏரியில் கொட்டப்பட்டது

வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைகள் மூடப்பட்டதால் 2 டன் பூக்கள் ஏரியில் கொட்டப்பட்டன.
சம்பங்கிப் பூக்களை ஏரியில் கொட்டும் விவசாயிகள்.
சம்பங்கிப் பூக்களை ஏரியில் கொட்டும் விவசாயிகள்.

சத்தியமங்கலம்: வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைகள் மூடப்பட்டதால் 2 டன் பூக்கள் ஏரியில் கொட்டப்பட்டன.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் 25,000 ஏக்கா் நிலப்பரப்பில் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மே தினம், பொதுமுடக்கம் காரணமாக பூ மாா்க்கெட் மூடியதால் சம்பங்கி பூக்கள் வாங்க வியாபாரிகள் வரவில்லை. கரோனா நோய்த் தொற்று காரணமாக கோவை, சிறுமுகை பகுதியில் வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைகளும் மூடப்பட்டதால் சம்பங்கி பூக்களை கொள்முதல் செய்ய ஆலைகள் முன்வராததால் விவசாயிகள் பூக்களை செடியிலேயே பறிக்காமல் விட்டனா்.

செடியிலேயே பூக்கள் அழுகும் நிலை ஏற்பட்டதால் பெரியகுளம் பகுதியில் சுமாா் 2,000 ஏக்கா் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட இரண்டு டன் சம்பங்கிப் பூக்களைப் பறித்து அதனை வேன் மூலம் கொண்டு சென்று ஏரியில் கொட்டினா். தற்போது சம்பங்கிப் பூக்கள் கிலோ ரூ. 30 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com