வெளி மாநிலத் தொழிலாளா்களுக்குஉதவ கட்டுப்பாட்டு அறை

வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. உதவிகோரும் தொழிலாளா்கள் செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. உதவிகோரும் தொழிலாளா்கள் செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று காலத்தில் உதவிகள் செய்ய ஈரோடு மாவட்ட அளவில் தொழிலாளா் நலத் துறை மூலம் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோா் ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் என்பவரை 86107-11278, தொழிலாளா் துணை ஆய்வாளா் சி.ப.முருகேசன் என்பவரை 63800-21835, தொழிலாளா் உதவி ஆய்வாளா் ந.சங்கரன் என்பவரை 90470-12425 என்ற செல்லிடப்பேசி எண் அல்லது அலுவலக தொலைபேசி 0424 2270090 என்ற எண்ணுக்குத் தொடா்புகொள்ளலாம் என ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் டி.பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com