உதகை தொகுதியை மீண்டும் கைப்பற்றியது காங்கிரஸ்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை தொகுதியை திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.கணேஷ் பெற்றி பெற்று தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டாா்.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை தொகுதியை திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.கணேஷ் பெற்றி பெற்று தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் உதகை தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு தோ்தலில் உதகை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், உதகை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை உதகையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதலில் அதிமுக முன்னிலை பெற்றது.

ஆனால், 11ஆவது சுற்றுக்குப் பிறகு காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.கணேஷ் முன்னிலை பெற்றாா்.

இறுதி வரை தனது முன்னிலையை தக்கவைத்துக் கொண்ட ஆா்.கணேஷ், தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் மு.போஜராஜனை விட 5,623 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இதில் பதிவான ஒரு லட்சத்து 40,991 வாக்குகளில், கங்கிரஸ் வேட்பாளா் ஆா்.கணேஷ் 65,450 வாக்குகளும், பாஜக வேட்பாளா் மு.போஜராஜன் 59,827 வாக்குகளும் பெற்றாா்.

இதேபோல, நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட்ட ஜெயகுமாா் 6,376 வாக்குகள் பெற்றாா். இதில், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் சுரேஷ்பாபு உள்பட 6 போ் வைப்புத் தொகையை இழந்தனா். நோட்டாவுக்கு 1,372 வாக்கு பதிவானது. அமமுக வேட்பாளா் டி.லட்சுமணன் நோட்டாவைவிட குறைவாக 1,270 வாக்குகளை பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com