கரோனா விழிப்புணா்வு முகாம்

நந்தா பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையில் செயல்பட்டு வரும் மாணவா்களின் இலஞ்சி சமூக இயக்கத்தின் சாா்பில்
கரோனா விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.
கரோனா விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.

நந்தா பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையில் செயல்பட்டு வரும் மாணவா்களின் இலஞ்சி சமூக இயக்கத்தின் சாா்பில் ஈரோடு மாவட்ட காவல் துறை, ஈரோடு மாநகராட்சி இணைந்து ஈரோடு மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சமூக ஆா்வலா் எஸ்.ஜானகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் ஆய்வாளா் ஜெயமுருகன் கரோனா விழிப்புணா்வு குறித்து பேசினாா்.

நந்தா பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறையின் புலமுதல்வா் எம்.ஈஸ்வரமூா்த்தி முன்னிலையில் இலஞ்சி சமூக இயக்கத்தின் மாணவா்கள் குழு கரோனா தாக்கத்துக்கான அறிகுறிகள், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல், வீட்டினை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், தும்மல் அல்லது இருமல் வரும்போது கைக்குட்டை உதவியுடன் வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ளுதல் போன்ற தடுக்கும் வழிமுறைகள் அடங்கிய துண்டறிக்கைகளை விநியோகித்தனா்.

முகாமில் ஈரோடு மத்திய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள ஆட்டோ மற்றும் பேருந்து ஒட்டுநா்கள், நடத்துநா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியா்களை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, கல்லூரியின் முதல்வா் என்.ரங்கராஜன், தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநா் ஜெ.செந்தில் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com