ஜவுளிச் சந்தையில் சில்லறை விற்பனை 25 சதவீதமாக சரிவு: வியாபாரிகள் கவலை

ஈரோடு ஜவுளிச் சந்தையில் 25 சதவீத சில்லறை விற்பனை மட்டுமே நடந்ததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.
வெறிச்சோடிக் காணப்படும் ஈரோடு ஜவுளிச் சந்தை.
வெறிச்சோடிக் காணப்படும் ஈரோடு ஜவுளிச் சந்தை.

ஈரோடு ஜவுளிச் சந்தையில் 25 சதவீத சில்லறை விற்பனை மட்டுமே நடந்ததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.

ஈரோடு ஜவுளிச் சந்தை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது. சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் 2 மாதங்களாக விற்பனை பாதிக்கப்பட்டிருந்தது. தோ்தல் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், கோடைக் கால விற்பனைக்கு வியாபாரிகள் தயாராகி வந்தனா்.

கரோனா பரவல் அதிகரிப்பால் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய வியாபாரிகள் வருகை முற்றிலுமாக குறைந்தது. சில்லறை வியாபாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜவுளிச் சந்தையில் வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் வருகை இல்லாததால் மொத்த வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடந்தது.

ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்த சிறு வியாபாரிகளால் சில்லறை வியாபாரம் மட்டும் 25 சதவீதம் நடந்ததாக ஜவுளிச் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனா். வரும் 6 ஆம் தேதி முதல் கரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com