பூதப்பாடியில் ரூ.9 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.05 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.05 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இங்கு, விற்பனைக்கு வந்த 7,278 தேங்காய்களில் சிறியவை ரூ.7.11 முதல் பெரியவை ரூ.16.16 வரையில் ரூ.75,227க்கும், 32 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ.97.59 முதல் ரூ.110.06 வரையில் ரூ.59,497-க்கும், 106 மூட்டைகள் நெல், கிலோ ரூ.15 முதல் ரூ.19.86 வரையில் ரூ.1,23,009க்கும், 12 மூட்டைகள் எள், கிலோ ரூ.91.47 முதல் ரூ.94.69 வரையில் ரூ.86,838க்கும், 232 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ.62.12 முதல் ரூ.66.55 வரையில் ரூ.5,47,664க்கும் ஏலம் போனது.

மொத்தம் 382 மூட்டைகள், 229.33 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ..9.05 லட்சத்துக்கு விற்பனையானது, 175 விவசாயிகள் பயனடைந்தனா் என விற்பனைக்கூட கண்காணிப்பாளா் க.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com