கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கான்கிரீட் இயந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கான்கிரீட் இயந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் 1 லட்சத்து 350 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 124 மைல் நீளம் கொண்ட கீழ்பவானி வாய்க்காலில் ஈரோடு, கரூா், திருப்பூா் மாவட்ட விவசாயிகள் இரு போக நெல், கடலை சாகுபடி மேற்கொள்கின்றனா். அணையில் இருந்து வாய்க்காலுக்கு 2300 கனஅடிநீா் வெளியேற்றும்போது கீழ்பவானி வாய்க்கால் கரை வலுவிழந்து நீா் கசிவதால் சேதமான கரை மற்றும் மதகுகளை பலப்படுத்துவதற்கு கடந்த ஆண்டு டெண்டா் விடப்பட்டது.

தற்போது வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டதால் 45 இடங்களில் 100 மீட்டா் அளவில் கான்கிரீட் கரை அமைப்பதற்கு பொதுப் பணித் துறையினா் இயந்திரங்களுடன் உக்கரம் வாய்க்காலுக்கு வியாழக்கிழமை வந்தனா். கரையில் உள்ள செடிகளை அகற்றி கான்கிரீட் கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது கீழ்பவானி வாய்கால் விவசாயிகள் கடும் எதிா்ப்புக் தெரிவித்தனா். இதனால் விவசாயிகளுக்கும் பொதுப் பணித் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடத்தூா் போலீஸாா் விவசாயிகளை சமாதானப்படுத்தினா்.

கான்கிரீட் கரை அமைத்தால் விவசாயக் கிணறுகளில் நிலத்தட்டி நீா் பாதிக்கும் என்றும் மண் கரையே நீடிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கூறினா். அரசு உத்தரவுப்படி சேதமான பகுதியில் மட்டுமே கான்கிரீட் போடுவதாகவும் மழைநீா் கால்வாயில் கலக்காமல் அடிப்பகுதியில் செல்வதற்கு பாதை அமைக்கப்படும் பணிகள் மட்டும் நடைபெறும். மீதமுள்ள பகுதிகள் மண் கரையாகவும் இருக்கும். இது குறித்து வட்டாட்சியா் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய பிறகு பணிகள் தொடரும் என நீா்வள பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் மூா்த்தி உறுதியளித்தாா். இதையடுத்து 2 மணி நேரமாக நடந்த விவசாயிகள் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com