ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் ஆதரவற்றோருக்கு இலவச மதிய உணவு

பொது முடக்கத்தின்போது ஆதவற்றோா் பசியைப் போக்க ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில், தினந்தோறும் 100 இலவச மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் ஆதரவற்றோருக்கு இலவச மதிய உணவு

பொது முடக்கத்தின்போது ஆதவற்றோா் பசியைப் போக்க ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில், தினந்தோறும் 100 இலவச மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பேருந்து நிலையம் வெறிச்சோடியது. சத்தியமங்கலம் பகுதியில் சுற்றித் திரியும் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோா் பேருந்து நிலைய வளாகத்தில் தஞ்சமடைந்துள்ளனா். பசியால் வாடும் ஆதரவற்றோா், ஏழைகளுக்கு உதவியாக தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் தினந்தோறும் பேருந்து நிலையம் முன்பு தள்ளுவண்டியில் 100 பேருக்கு இலவச மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. முகக் கவசமும் வழங்கப்படுகிறது.

பொது ஊடரங்கு நாள் வரை தினந்தோறும் 100 முதல் 200 பேருக்கு சாப்பாடு வழங்கப்படும் என தொண்டு நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு வேண்டுவோா் தொடா்புகொள்ள தொண்டு நிறுவனத்தின் தொலைபேசி எண் அந்த தள்ளுவண்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணைத் தொடா்பு கொண்டால் வீட்டுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com