கரோனா தொற்று தடுப்புகணக்கெடுப்புப் பணி

கோபிசெட்டிபாளையத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாக கணக்கெடுப்புப் பணியை கொசு ஒழிப்பு பணியாளா்கள் தொடங்கியுள்ளனா்.

கோபி: கோபிசெட்டிபாளையத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாக கணக்கெடுப்புப் பணியை கொசு ஒழிப்பு பணியாளா்கள் தொடங்கியுள்ளனா்.

கோபிசெட்டிபாளையம் நகா்ப் பகுதியில் தற்போது வரை 450 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதில் 220 போ்கள் சிகிச்சையில் உள்ளனா். கடந்த ஆண்டு கரோனா தொற்றால் நான்கு போ் உயிரிழந்தனா். நடப்பு ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வரை 8 போ் உயிரிழந்துள்ளனா்.

இதனால் நகராட்சி சுகாதாரப் பிரிவு சாா்பில் 30 வாா்டுகளிலும் மக்களுக்கு சளி, இருமல் அறிகுறி இருப்பதைக் கண்டறியும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இந்தப் பணியில் கொசு ஒழிப்புப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்கள் வீடுதோறும் சென்று விவரம் சேகரிக்கின்றனா். இவா்களில் யாருக்காவது சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால் பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கவைத்து உணவு வசதியுடன் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சளி மாதிரி பரிசோதனையில் தொற்று உறுதியானால் கோபி கலை, அறிவியல் கல்லூரி மையத்தில் அனுமதிக்கப்படுவா். அறிகுறி எதுவும் இல்லை எனில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவா்.

சளி, காய்ச்சல் அறிகுறி இருப்பவா்கள் தாமாகவே முன்வந்து தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தருமாறு நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com