ஈரோடு மாநகராட்சியில் புதை சாக்கடைப் பணிகள் தீவிரம்

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் புதை சாக்கடைப் பணிகள் மீண்டும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு  -  பவானி  சாலையில்  நடைபெறும்  புதை சாக்கடைப்  பணிகள்.
ஈரோடு  -  பவானி  சாலையில்  நடைபெறும்  புதை சாக்கடைப்  பணிகள்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் புதை சாக்கடைப் பணிகள் மீண்டும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடையாமல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்ற நிலையில், புதை சாக்கடைப் பணிகள் நிதானமாகவே நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இத்திட்டத்தை நிறைவு செய்யும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். முழு முடக்கம் அறிவிக்கட்ட நிலையில் போக்குவரத்து முடங்கியுள்ளதால் இப்பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பவானி சாலை, லட்சுமி திரையரங்கு சாலை, காலிங்கராயன் வாய்க்கால் சாலை, மணிக்கூண்டு, நேதாஜி சாலை என பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் புதைசாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

முழு முடக்கம் முடியும் முன்னரே இப்பணிகளை முடிக்க வேண்டும் எனவும், வாகன நடமாட்டம், மக்கள் நடமாட்டம் உள்ள காலங்களில் இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியாது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com