வாகனங்கள் மூலம் மளிகைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதி

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்கள் மூலம் மளிகைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்கள் மூலம் மளிகைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு நகராட்சிப் பகுதியில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் கரோனா தடுப்பு விதிகளை மீறும் காய்கறி, மளிகைக் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

ஆனால், பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்படுவதால் கடைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், தொற்று பரவுவதைத் தடுக்கவும், கடைகளைத் தேடி மக்கள் வருவதைத் தவிா்க்கவும், பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்று காய்கறிகள், மளிகைப் பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில், வாகனங்கள் மூலம் பொதுமக்கள் வசிக்கும் இடத்துக்குச் சென்று மளிகை உள்ளிட்ட பொருள்களை காலை 6 மணி முதல் 10 மணி வரை விற்பனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் கூறுகையில், மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் சூப்பா் மாா்க்கெட், பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகளுக்குச் சொந்தமான வாகனங்கள் மூலம் பொதுமக்கள் வசிப்பிடத்துக்குச் சென்று விற்பனை செய்யலாம். எந்தப் பகுதிக்குச் செல்கிறோம் என்பதை மாநகராட்சி அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இந்நடவடிக்கையின் மூலம் மக்கள் கூட்டம் குறையும் வாய்ப்புகள் குறையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com