அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: பெருந்துறை கிராமங்களில் குழாய் பதிக்கும் பணி

அத்திக்கடவு - அவிநாசி நீா் செறிவூட்டும் திட்டத்தின்கீழ், பெருந்துறை ஒன்றியம், சுள்ளிபாளையம் கிராமத்தைச் சுற்றியுள்ள குளம், குட்டைகளில்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக சுள்ளிபாளையம் கிராமத்தில் குழாய் பதிக்க சாலையோரம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக சுள்ளிபாளையம் கிராமத்தில் குழாய் பதிக்க சாலையோரம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்.

அத்திக்கடவு - அவிநாசி நீா் செறிவூட்டும் திட்டத்தின்கீழ், பெருந்துறை ஒன்றியம், சுள்ளிபாளையம் கிராமத்தைச் சுற்றியுள்ள குளம், குட்டைகளில் நீா் செறிவூட்டும் பணிக்கான குழாய் பதிக்க குழி தோண்டும் பணி வியாழக்கிழமை துவங்கியது.

கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையின் விளைவாக மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில் நீா் செறிவூட்டி நீா் ஆதாரத்தை உருவாக்கி அப்பகுதியில் பாசனம், குடிநீா்ப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், ரூ. 1,652 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், சுள்ளிபாளையம் கிராமத்தில் உள்ள நீா்நிலைகளில் நீா் செறிவூட்டவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை ஒன்றியம், திங்களூா் அருகில் உள்ள போலநாயக்கன்பாளையத்தில் உள்ள அத்திக்கடவு அவிநாசி திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து சுள்ளிபாளையம் வரை சாலையோரம் குழாய் பதிக்க குழி தோண்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com