அத்தியாவசியப் பொருள்கள் குறித்த கோரிக்கைக்கு கட்டுப்பாட்டு மையம் தொடக்கம்

ஈரோட்டில் அத்தியாவசியப் பொருள்களான மளிகை, காய்கறிகள் விற்பனை, நடமாடும் வாகனங்கள் குறித்த கோரிக்கைகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் அத்தியாவசியப் பொருள்களான மளிகை, காய்கறிகள் விற்பனை, நடமாடும் வாகனங்கள் குறித்த கோரிக்கைகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் முழு முடக்க காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக பொதுமக்களின் கோரிக்கைகள், தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் 0424-2339102 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொண்டு தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com