கோபியில் போலி மருத்துவா் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே போலி மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாகராஜ்.
நாகராஜ்.

கோபிசெட்டிபாளையம் அருகே போலி மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (58). இவா் உரிய மருத்துவ அனுமதியின்றி பொது மக்களுக்கு ஆங்கில மருத்துவம் செய்து வருவதாக காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மருத்துவா் யசோதாபிரியாவுக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சுகாதார ஆய்வாளா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் இவரது மருத்துவமனையை சோதனை செய்தனா். அப்போது, இவரிடம் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் இல்லை என்பதும், அரசு அனுமதியின்றி பொது மக்களுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கடத்தூா் காவல் நிலையத்தில் மருத்துவா் யசோதாபிரியா அளித்த புகாரின்பேரில் நாகராஜை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், நாகராஜ் கோட்டுப்புள்ளாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராகப் பணியாற்றி வந்ததாகவும், கடந்த 2012ஆம் ஆண்டு இதே மாதிரி வழக்கில் கைதாகி சிறை சென்றதும், இந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதும் தெரியவந்தது. சிறையிலிருந்து வெளியில் வந்த நாகராஜ் மீண்டும் இதே போன்ற செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com