சென்னிமலை முருகப்பெருமானுக்கு தடையில்லாமல் தொடரும் திருமஞ்சனம்

சென்னிமலை முருகப் பெருமானுக்கு அடிவாரத்தில் இருந்து நாள்தோறும் காளைமாடு மூலம் தடையில்லாமல் திருமஞ்சனம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

சென்னிமலை முருகப் பெருமானுக்கு அடிவாரத்தில் இருந்து நாள்தோறும் காளைமாடு மூலம் தடையில்லாமல் திருமஞ்சனம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் கோயில்கள் நடை அடைக்கப்பட்டு, பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கோயில்களில் கால பூஜைகள் தடையின்றி நடக்கின்றன. இதன்படி, சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணி சுவாமி கோயில் முருகப் பெருமானுக்கு தினசரி கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் மூலவா் சிலைக்கு அபிஷேகம் செய்வதற்கு காளைமாடு மூலம் கோயில் அடிவாரத்தில் உள்ள கோயில் தீா்த்தக் கிணற்றில் திருமஞ்சனம் எடுத்துச் செல்லப்படுவது தனிச் சிறப்பாகும். படிக்கட்டு வழியாக காளை மாடு மூலம் திருமஞ்சனம் கொண்டு சென்று காலை 8 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.

தற்போது கரோனா பொதுமுடக்கத்திலும் மூலவா் முருகப் பெருமானுக்கு தடையின்றி தினமும் கோயில் தீா்த்தக் கிணற்றில் திருமஞ்சனம் படி வழியாக காளை மாடு மூலம் எடுத்துச் சென்று அபிஷேகம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com