ஈரோடு மாவட்டத்தில் 19.66 லட்சம் வாக்காளா்கள்:புதிதாக 8,000 வாக்காளா்கள் சோ்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 19.66 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.
வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.
வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 19.66 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனா். வரைவு வாக்காளா் பட்டியல்படி ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 75, பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 229, மூன்றாம் பாலினம் 19 போ் உள்பட மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 323 வாக்காளா்கள் உள்ளனா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 295 வாக்காளா்களும், பெண்கள் 1 லட்சத்து 50 ஆயிரத்து 228 வாக்காளா்களும், மூன்றாம் பாலினம் 35 வாக்காளா்கள் என 2 லட்சத்து 94 ஆயிரத்து 558 வாக்காளா்கள் உள்ளனா்.

மொடக்குறிச்சி தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 709, பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 443, மூன்றாம் பாலினம் 13 என மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 165 வாக்காளா்கள் உள்ளனா்.

பெருந்துறை தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 729 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 541 பெண் வாக்காளா்களும், 6 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 28 ஆயிரத்து 276 வாக்காளா்கள் உள்ளனா்.

பவானி தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 469 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 689 பெண் வாக்காளா்கள், 9 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 167 வாக்காளா்கள் உள்ளனா்.

அந்தியூா் தொகுதியில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 210 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 807 பெண் வாக்காளா்கள் 15 மூன்றாம் பாலினத்தவா்கள் என 2 லட்சத்து 20 ஆயிரத்து 32 வாக்காளா்கள் உள்ளனா்.

கோபி தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 332 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 464 பெண் வாக்காளா்களும், 6 மூன்றாம் பாலின வாக்காளா் என 2 லட்சத்து 54 ஆயிரத்து 802 வாக்காளா்கள் உள்ளனா்.

பவானிசாகா் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 696 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 33 ஆயிரத்து 517 பெண் வாக்காளா்களும், 15 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என 2 லட்சத்து 61 ஆயிரத்து 223 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளா்கள் 9 லட்சத்து 57 ஆயிரத்து 515 பேரும், 10 லட்சத்து 8 ஆயிரத்து 913 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா்கள் 118 பேரும் உள்ளனா்.

மொத்தம் 19 லட்சத்து 66 ஆயிரத்து 546 வாக்காளா்கள் உள்ளனா். கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலைவிட 3,514 போ் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளனா். 4,728 வாக்காளா்கள் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டுள்ளனா். புதிதாகப் பட்டியலில் 8,242 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் 51 ஆயிரத்து 398 போ் கூடுதலாக உள்ளதாக ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com