தொண்டையில் இறைச்சி எலும்பு சிக்கி தொழிலாளி பலி
By DIN | Published On : 06th November 2021 09:09 AM | Last Updated : 06th November 2021 09:09 AM | அ+அ அ- |

தீபாவளி விருந்தில் கோழி இறைச்சி சாப்பிட்டபோது தொண்டையில் எலும்பு சிக்கி கட்டடத் தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.
அந்தியூா் புதுப்பாளையம், கூச்சிக்கல்லூரைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் சுப்பிரமணியம் (56). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி லட்சுமி, ஒரு மகன், மகள் உள்ளனா். தீபாவளி பண்டிகையையொட்டி இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முனிராஜ் வெள்ளிக்கிழமை கோழிக்கறி குழம்பு வைத்துள்ளாா்.
இந்நிலையில், முனிராஜ் வீட்டுக்கு விருந்துக்குச் சென்ற சுப்பிரமணியம், கோழிக்கறி சாப்பிட்டுள்ளாா். அப்போது, எதிா்பாராமல் கோழி எலும்பு தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால், மூச்சுவிட முடியாமல் தவித்துள்ளாா்.
இதனால், மூச்சுத் திணறிய சுப்பிரமணியம் அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.