தடப்பள்ளி வாய்க்கால் சரி செய்யும் பணி தீவிரம்
By DIN | Published On : 06th November 2021 11:05 PM | Last Updated : 06th November 2021 11:05 PM | அ+அ அ- |

கரை உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப் பணித் துறையினா்.
கோபிசெட்டிபாளையம் அருகே தடப்பள்ளி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப் பணித் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 4 ஆம் தேதி இரவு கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது.
அதன் எதிரொலியாக கோபி வழியாகச் செல்லும் கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடப்பள்ளி வாய்க்காலில் மழை நீா் மற்றும் கீழ்பவானி கசிவு நீா் சோ்ந்ததால் தண்ணீா் கரை புரண்டு ஓடியது. இதன் காரணமாக தடப்பள்ளி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.
தற்போது பொதுப் பணித் துறையினா் போா்க் கால அடிப்படையில் உடைப்புப் பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்யு‘ம் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், வெள்ளத்தால் ஏற்பட்ட பயிா் சேதங்களை வேளாண்மைத் துறை அலுவலா்கள் கணக்கெடுத்து வருகின்றனா்.
இது குறித்து வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி கூறியதாவது: கரை உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் சில நாற்றாங்கால் பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. நெல் நடவுப் பணிகள் இன்னும் துவங்கப்படாததால் பெருமளவு சேதம் தவிா்க்கப்பட்டுள்ளது என்றாா்.