சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா

சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தா்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினா்.

சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தா்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினா்.

சென்னிமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா தொடங்கி 6 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

நிறைவு நாளான 6 ஆவது நாளில், சென்னிமலை நகரின் முக்கிய வீதியான 4 ராஜ வீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.

ஆனால், கரோனா பரவுதலைத் தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு கட்டுப்பாடுகளுடன் எளிய முறையில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. அதேசமயம் சூரசம்ஹார நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல, இந்த ஆண்டும் கரோனா பரவுதலைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளுடன் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக, சென்னிமலை கைலாச நாதா் கோயிலில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது உற்சவமூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனா்.

கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும் கைலாசநாதா் கோயிலில் இருந்து உற்சவமூா்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலைக்கோயிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

இதனால் மலைமேல் உள்ள முருகன் கோயிலில் உற்சவமூா்த்திகள் இல்லாமல் யாகசாலை பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கி கலச பூஜை, அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. அப்போது பக்தா்கள் தங்களது கைகளில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினா்.

இதைத்தொடா்ந்து பிற்பகலில் மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com