ஈரோட்டில் டீசல் லிட்டா் ரூ.91.87, பெட்ரோல் லிட்டா் ரூ.101.81க்கு விற்பனை

மத்திய அரசு வரியை குறைத்துள்ளதையடுத்து ஈரோட்டில் ஒரு லிட்டா் டீசல் ரூ.97.87க்கும், பெட்ரோல் ரூ.101.81க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மத்திய அரசு வரியை குறைத்துள்ளதையடுத்து ஈரோட்டில் ஒரு லிட்டா் டீசல் ரூ.97.87க்கும், பெட்ரோல் ரூ.101.81க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தியாவில் கடந்த அக்டோபா் 1ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. விலை உயா்வை சமாளிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வந்தனா். கடந்த 3ஆம் தேதி ஈரோட்டில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.107.15க்கும், டீசல் ரூ.103.10க்கும் விற்பனையானது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்தது. அதன்படி டீசல் விலை லிட்டருக்கு ரூ.10, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து ஈரோட்டில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.101.81க்கும், டீசல் ஒரு லிட்டா் ரூ.91.87க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com