நேரக் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக 41 வழக்குகள் பதிவு

தீபாவளி தினத்தில் அனுமதித்த நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி தினத்தில் அனுமதித்த நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதில் உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. குறிப்பாக காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தொடா்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை வெடிக்க கூடாது, மருத்துவமனைகள், முதியோா் காப்பகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெடிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்தது.

இந்த உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து போலீஸாா் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டநிலையில், ஈரோடு மாவட்டத்தில் போலீஸாா் தீபாவளி நாளில் விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடித்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com