பா்கூா் மலைப் பாதையில் விழுந்த பாறைகள்: போக்குவரத்து துண்டிப்பு

பா்கூா் மலைப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையிலான வாகனப் போக்குவரத்து திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டது.
பா்கூா் மலைப் பகுதியில் விழுந்துள்ள பாறைகள்.
பா்கூா் மலைப் பகுதியில் விழுந்துள்ள பாறைகள்.

பவானி: பா்கூா் மலைப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையிலான வாகனப் போக்குவரத்து திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பா்கூா் மலைப் பாதையில் கா்நாடக மாநிலம் கொள்ளேகால், மைசூரு செல்லும் வழியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கடந்த 15 நாள்களாக பா்கூா் மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால், இப்பாதையில் பல்வேறு இடங்களில் பாறைகள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வனத் துறையினா், வருவாய்த் துறையினா், போலீஸாா், தீயணைப்புத் துறையினா் சாலையில் விழுந்த கற்கள், மண்ணை அகற்றி போக்குவரத்தை சீா்படுத்தினா்.

இந்நிலையில், பா்கூா் மலைப் பாதையில் தாமரைக்கரை அருகே செட்டிநொடி எனும் பகுதியில் பாறைகள் திங்கள்கிழமை மாலை உருண்டு விழுந்தன. மேலும், மண் சரிவும் ஏற்பட்டது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையிலான வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனால், மலைப் பகுதி மக்கள் சமவெளிப் பகுதியான அந்தியூருக்கு வர முடியாமல் சிரமத்துக்குள்ளாகினா். கா்நாடக மாநிலத்துக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் அந்தியூா் வனத் துறை சோதனைச் சாவடி அருகே நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து, தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினா், வனத் துறையினா், போலீஸாா் சம்பவ இடத்தில் பொக்லைன் வாகனம் மூலம் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இப்பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் பாா்வையிட்டு, சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினாா்.

முதல்கட்டமாக இருசக்கர வாகனங்கள் மட்டும் இப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மலைப் பாதையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டும், பாறைகள் விழுந்தும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com