ஈரோடு மாவட்டத்தில் 13.77 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 21st November 2021 11:33 PM | Last Updated : 21st November 2021 11:33 PM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 13.77 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்ட மொத்த மக்கள் தொகை 24 லட்சம். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 போ். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 19ஆம் தேதி தேதி வரை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 77 ஆயிரத்து 865 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
மாவட்டத்தில் தினமும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 21 லட்சத்து 51 ஆயிரத்து 246 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.