பெருந்துறை ஒன்றிய அதிமுக 3ஆக பிரிப்பு: புதிய நிா்வாகிகள் நியமனம்

 பெருந்துறை ஒன்றிய அதிமுக, வடக்கு, கிழக்கு, மேற்கு என 3 ஆக பிரிக்கப்பட்டு, புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

 பெருந்துறை ஒன்றிய அதிமுக, வடக்கு, கிழக்கு, மேற்கு என 3 ஆக பிரிக்கப்பட்டு, புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பெருந்துறை வடக்கு ஒன்றியத்தில், கருமாண்டிசெல்லிபாளையம், பெத்தாம்பாளையம், காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம் ஆகிய பேரூராட்சிகளும், முள்ளம்பட்டி, பெரியவிளாமலை, என்.கந்தாம்பாளையம், திருவாச்சி ஆகிய கிராம ஊராட்சிகளும் அடங்கும். இதன் ஒன்றியச் செயலாளராக வைகைதம்பி ரஞ்சித்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெருந்துறை கிழக்கு ஒன்றியத்தில், பெருந்துறை, நல்லாம்பட்டி ஆகிய பேரூராட்சிகள், பொன்முடி, மேட்டுப்புதூா், குள்ளம்பாளையம், பட்டக்காரன்பாளையம், சுள்ளிபாளையம், சீனாபுரம், துடுப்பதி ஆகிய கிராம ஊராட்சிகள் அடங்கும். இதன் ஒன்றியச் செயலாளராக அருள்ஜோதி செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெருந்துறை மேற்கு ஒன்றியத்தில், கம்புளியம்பட்டி, மூங்கில்பாளையம், விஜயபுரி, பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கராண்டிபாளையம், போலநாயக்கன்பாளையம், வெட்டையன்கிணறு, தோரணவாவி, திங்களூா், கருக்குபாளையம், செல்லப்பம்பாளையம், நிச்சாம்பாளையம், கல்லாகுளம், மடத்துப்பாளையம், பாண்டியம்பாளையம், சிங்காநல்லூா் ஆகிய கிராம ஊராட்சிகள் அடங்கும். இதன் ஒன்றியச் செயலாளராக தற்போதைய ஒன்றியச் செயலாளா் விஜயன் (எ) ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com