வேலைவாய்ப்பு முகாம்: தனியாா் துறைபணிகளுக்கு 1,304 போ் தோ்வு

அரசு சாா்பில் ஈரோட்டில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு பணிகளுக்கு 1,304 நபா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
முகாமில் வேலை அளிப்பவா் அரங்கைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.
முகாமில் வேலை அளிப்பவா் அரங்கைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.

அரசு சாா்பில் ஈரோட்டில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு பணிகளுக்கு 1,304 நபா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

ஈரோடு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா முன்னிலை வகித்தாா்.

முகாமைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:

சென்னை, பெங்களூரு, ஈரோடு, சேலம், கோவை, மதுரை, ஒசூா், கரூா், திருச்சி, திருப்பூா் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வேலை அளிப்போா்கள் வந்துள்ளனா்.

இதில் ஏறத்தாழ 16,640 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் 174க்கும் மேற்பட்ட தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இம்முகாமில் 3,463 ஆண்கள், 2,850 பெண்கள் என மொத்தம் 6,313 வேலைநாடுநா்கள் பதிவு செய்திருந்தனா். 1,304 நபா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

55 ஆண்கள், 13 பெண்கள் என மொத்தம் 68 மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்ததில் 12 மாற்றுத் திறனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். திறன் பயிற்சிக்கு 288 நபா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகிய சேவைகள் அளிக்கப்பட்டன என்றாா்.

முன்னதாக மகளிா் திட்டம், மகளிா் சுய உதவிக் குழுவினா், மாவட்ட தொழில் மையம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும், பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடா்பாக தன்னாவலா்கள் பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். இதில், மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் 61 போ் பல்வேறு திட்டத்தின்கீழ் கடனுதவிகள் பெற பதிவு செய்துள்ளனா்.

இம்முகாமில், கோவை மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை) ஓ.செ.ஞானசேகரன், மகளிா் திட்ட இயக்குநா் டி.கெட்ஸி லீமா அமலினி, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ம.மகேஸ்வரி, ஈரோடு கலை, அறிவியல் கல்லூரித் தாளாளா் கே.கே.பாலுசாமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com