பவானியில் ரேக்ளா பந்தயத்தில் பாய்ந்த குதிரைகள்
By DIN | Published On : 29th November 2021 05:41 AM | Last Updated : 29th November 2021 05:41 AM | அ+அ அ- |

பந்தயத்தில் சீறிப் பாய்ந்து ஓடும் குதிரைகள்.
பவானியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாய்ந்து சென்ற குதிரைகளை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.
திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பவானி நகர திமுக சாா்பில் குதிரை ரேக்ளா பந்தயம் பவானி - ஆப்பக்கூடல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரிய குதிரைக்கு 10 மைல், நடுத்தரக் குதிரைக்கு 8 மைல், உள்ளூா் குதிரைக்கு 8 மைல் தொலைவு இலக்கு வைக்கப்பட்டது.
பந்தயம் தொடங்கியதும் குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதில், முதல் மூன்றிடம் பெற்ற குதிரைகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன் தலைமை வகித்தாா். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவா் குறிஞ்சி என்.சிவகுமாா், திமுக மாநில சுற்றுச்சூழல் அணிச் செயலாளா் காா்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோா் பந்தயத்தைத் தொடக்கிவைத்தனா்.
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் கே.ஏ.சேகா், நகர அமைப்பாளா் இந்திரஜித், பவானி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் கா.சு.மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.